தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது- கே.எஸ். அழகிரி தாக்கு

Published On 2025-11-13 09:55 IST   |   Update On 2025-11-13 09:55:00 IST
  • பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பொய் பிரசாரம் செய்கின்றனர்.
  • ராகுல் தான் இந்தியாவை வழி நடத்துவார்.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-

பா.ஜ.க. ராட்சத பலத்துடன் உள்ளது. நம்மிடம் கொள்கை பலம் உள்ளது. காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களில் மு.க. ஸ்டாலின் மட்டுமே கொள்கையுடன் சிறப்பாக செயல்படுகிறார்.

மு.க. ஸ்டாலின் நினைத்திருந்தால் பா.ஜ.க.வை அரவணைத்து செல்லலாம். ஆனால் அதை தவித்து ராகுலுக்கு துணையாக நிற்கிறார்.

பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பொய் பிரசாரம் செய்கின்றனர். தவறான கருத்துக்களை திரும்ப திரும்ப சொல்லி மக்கள் மனதில் விதைக்கின்றனர். எதிர்மறை கருத்துகளுக்கு அந்த இடத்திலேயே பதிலடி தர வேண்டும்.

நாம் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும். ஆட்சியில் பங்கு பெற வேண்டும். இது கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பானவர். அதற்காக கூட்டணி என்ற பெயரில் எல்லாவற்றையும் இழந்து விட முடியாது. இந்த கூட்டணியை விரும்புகிறேன்.

அடுத்த முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் வர வேண்டும். அது போல் நாமும் வளர வேண்டும். ராகுல் வரலாறு என்ன. அவரை போல அரசியல் வரலாறு கொண்ட நபர்கள் யாராவது உள்ளனரா? கொள்கை தான் அவரது கோட்பாடு. ராகுல் தான் இந்தியாவை வழி நடத்துவார். அதுவரை காங்கிரஸ் கட்சியினருக்கு தூக்கம் வராது.

தி.மு.க. இல்லாவிட்டால் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெற முடியாது என பா.ஜ.க.வினர் கூறுவது அவர்கள் எங்கள் மீது எவ்வளவு கோபத்தில் இருக்கின்றனர் என தெரிகிறது.

அ.தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியே வந்தால் அவர்களுக்கு ஒரு ஓட்டு கூட விழாது என்று கூறலாம். நாங்கள் கொள்கை கூட்டணி.

கொள்கைக்காக உழைத்து வருகிறோம். கடந்த தேர்தல்களில் பா.ஜ.க. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என்று நான் கூறினேன்.

அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் கொஞ்சம் ஓட்டு விழும். ஆனாலும் அவர்கள் வெற்றி பெற முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News