தமிழ்நாடு செய்திகள்
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- கமிஷனர் அலுவலகத்தில் புகார்
- கமல்ஹாசன் எம்.பி. சென்னையில் நடந்த ஒரு விழாவில் சனாதனம் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
- கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான கமல்ஹாசன் எம்.பி. சென்னையில் நடந்த ஒரு விழாவில் சனாதனம் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துணை நடிகரான ரவி என்பவர் பேட்டி அளித்துள்ளார். அதில் கமல்ஹாசனின் சங்கை அறுப்போம் என்று கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.
இதனை கண்டித்து மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் துணைத்தலைவர் மவுரியா மற்றும் நிர்வாகிகள் கவிஞர் சினேகன், முரளி அப்பாஸ், மயில்வாகனன், அர்ஜுனர் ஆகியோர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தனர்.
அதில் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.