தமிழ்நாடு செய்திகள்
null

கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் சிறைத்தண்டனை: தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்

Published On 2025-04-29 14:24 IST   |   Update On 2025-04-29 14:41:00 IST
  • வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும்போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்.
  • வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும்போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் பிணையில் வெளிவர முடியாத சிறைத்தண்டனை.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 26ஆம் தேதி கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்க இந்த மசோதா வழி வகை செய்கிறது.

மேலும், வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும்போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும் போன்றவை மசோதாவில் இடம்பெற்றுள்ளது.

இந்த மசோதாவின்படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம்.

Tags:    

Similar News