தமிழ்நாடு செய்திகள்
ஆர்யா வீட்டில் வருமான வரித்துறை சோதனை?
- படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டெவில்ஸ் டபிள் நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்து இருந்தார்.
- வரி ஏய்ப்பு புகாரின்போரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா.
அறிந்தும் அறியாமலும், சர்வம், நான் கடவுள், ஆரம்பம், மதராசப்பட்டினம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டெவில்ஸ் டபிள் நெக்ஸ்ட் லெவல் படத்தை தயாரித்து இருந்தார்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள நடிகர் ஆர்யா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரி ஏய்ப்பு புகாரின்போரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.