தமிழ்நாடு செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

Published On 2025-08-12 12:13 IST   |   Update On 2025-08-12 12:13:00 IST
  • விமான நிலைய வாகன நிறுத்தம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கே.கே. நகர்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய வாகன நிறுத்தம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமான நிலையத்தில் முனைய நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் சோதனை செய்கின்றனர். அதனைத் தொடர்ந்து பயணிகளின் உடைமைகள் ஸ்கேனர் கருவின் மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட பின்பு முனையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இது வருகிற 20-ந் தேதி வரை தொடரும் என தெரிகிறது.

திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் விமான நிலைய இயக்குனர் ஞானேஸ்வரராவ் தேசிய கொடி ஏற்றி வைக்க உள்ளார். தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் மோப்பநாய் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News