தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-11-29 10:44 IST   |   Update On 2024-12-01 06:15:00 IST
2024-11-29 12:20 GMT

ஃபெங்கல் புயல் எதிரொலியால் கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-11-29 12:19 GMT

கனமழை எச்சரிக்கையால், சென்னை அரும்பாக்கம், பரங்கிமலை மெட்ரோ ரெயில் பார்க்கிங்கை இன்று மாலை முதல் நாளை மாலை வரை வாகனங்களை நிறுத்த வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

2024-11-29 11:54 GMT

வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவானதன் எதிரொலியாக, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஃபெங்கல் புயல்- மின்சேவை, மின் தடைக்கு 24 மணி நேரமும் செயல்படும் புகார் எண் அறிவிப்பு

2024-11-29 11:47 GMT

புதுச்சேரியை நெருங்கும் ஃபெங்கல் புயலால் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

2024-11-29 11:22 GMT

கடலூர் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

2024-11-29 11:21 GMT

பாம்பன், தூத்துக்குடியில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

2024-11-29 11:19 GMT

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

2024-11-29 11:14 GMT

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

2024-11-29 11:12 GMT

ஃபெங்கல் புயல் எதிரொலியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2024-11-29 10:44 GMT

நாகையிலிருந்து தென்கிழக்கே 260 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 270 கி.மீ., தொலைவில் ஃபெங்கல் புயல் மையம் கொண்டுள்ளது.

Tags:    

Similar News