மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் சென்னைக்கு அருகில் 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெங்கல் புயல் 13 கி.மீ வேகத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாகியுள்ளதால் தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 30 பேர் கொண்ட குழு விரைந்துள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் ஏற்கனவே 8 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒருவழியாக ஃபெங்கல் புயலாக வலுப்பெற்றது.
Over Hype கொடுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - ஃபெங்கல் புயலாக மாறியது
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 3 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகையில் இன்று அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாண்டி மெரினாவிற்கு செல்லும் சாலையை காவல்துறையினர் மூடினர்.
கடற்கரைக்கு வந்த மக்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.
ஃபெங்கல் புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும். புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும்- பாலச்சந்திரன்
தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகைக்கு 310 கிமீ தொலைவிலும், சென்னைக்கு 400 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. நாளை பிற்பகல் புதுச்சேரி, மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 90 கி.மீ வரை காற்று வீசக்கூடும் -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்