தமிழ்நாடு செய்திகள்

பாமகவின் வளர்ச்சிக்கு உறுதியாக பாடுபடுவேன்..!- ஸ்ரீகாந்தி

Published On 2025-10-25 14:52 IST   |   Update On 2025-10-25 14:59:00 IST
  • பா.ம.க. தலைவர் ராமதாஸ், பா.ம.க. செயல்தலைவராக ஸ்ரீகாந்தி செயல்படுவார் என அறிவித்தார்.
  • கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்று ராமதாஸ் தெரிவித்தார்.

பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது.

அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.

தொடர்ந்து, தருமபுரியில் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ம.க. தலைவர் ராமதாஸ், பா.ம.க. செயல்தலைவராக ஸ்ரீகாந்தி செயல்படுவார் என அறிவித்தார்.

கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

பா.ம..க செயல்தலைவர் பதவியில் இருந்து மகன் அன்புமணியை நீக்கிய ராமதாஸ் அந்த பதவியை மகள் ஸ்ரீகாந்திக்கு வழங்கி அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், பதவி நியமனத்திற்கு பின்னர் ஸ்ரீகாந்தி பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்," பாமக செயல் தலைவர் பதவியை அய்யா எனக்கு தருவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. பாமகவின் வளர்ச்சிக்கு உறுதியாக பாடுபடுவேன்" என்றார்.

Tags:    

Similar News