தமிழ்நாடு செய்திகள்

IF YOU ARE BAD I AM YOUR DAD... பாமக தொண்டர்கள் பிடித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

Published On 2025-08-17 13:20 IST   |   Update On 2025-08-17 13:20:00 IST
  • ராமதாஸ் 2025 மே மாதம் 30-ந்தேதி முதல் கட்சியின் தலைவராக செயல்படுவார்
  • தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசிற்கு மட்டுமே உள்ளது.

புதுச்சேரி அருகே தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பட்டானூரில் உள்ள சங்கமித்ரா தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.

பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் 2025 மே மாதம் 30-ந்தேதி முதல் கட்சியின் தலைவராக செயல்படுவார் என்றும் தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம். 2026 தேர்தல் கூட்டணி குறித்து பேச ராமதாசுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக தொண்டர்கள் பிடித்திருந்த "IF YOU ARE BAD I AM YOUR DAD" என்ற வாசகம் பொருந்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

Tags:    

Similar News