தமிழ்நாடு செய்திகள்
டெல்டா மாவட்டங்களில் கனமழை: 1000 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
- திருத்துறைப்பூண்டி அருகே 2 நாட்களாக பெய்த கனமழை பெய்தது
- நாகை சுற்று வட்டாரப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்தது
டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருசில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே 2 நாட்களாக பெய்த கனமழையால் விளை நிலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 1000 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்தது.
மேலும், நாகை சுற்று வட்டாரப் பகுதிகளில் இடைவிடாத கனமழை பெய்து வருவதால் விளை நிலங்களில் வெள்ளம் சூழ்ந்தது.