தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை
- கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
- நள்ளிரவில் பெய்த மழை அதிகாலை வரை தொடர்ந்தது.
சென்னை:
மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நள்ளிரவு முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்டிரல், கோயம்பேடு, எழும்பூர், புரசவைவாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, பழவந்தாங்கல், விருகம்பாக்கம், வடபழனி, அசோக்பில்லர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
இதேபோல், புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, பம்மல், போரூர், மேடவாக்கம், கூடுவாஞ்சேரி, ஆவடி, அம்பத்தூர், உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. நள்ளிரவில் பெய்த மழை அதிகாலை வரை தொடர்ந்து நீடித்தது.