தமிழ்நாடு செய்திகள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3-வது நாளாக கடும் பனிமூட்டம்- பொதுமக்கள் அவதி
- சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
- பல்வேறு பகுதிகள் பனி மூட்டத்தால் சூழ்ந்து காணப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
கடந்த 3 நாட்களாக நிலவும் பனிமூட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் பனி மூட்டத்தால் சூழ்ந்து காணப்பட்டது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சோத்துப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.