தமிழ்நாடு செய்திகள்
குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பை கண்டு ரசித்த கவர்னர், முதலமைச்சர்
- கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
- குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
சென்னை:
நம் நாட்டின் 76-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற்றது. விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது.
காவல்துறை, செய்தித்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை ஊர்திகள், கைத்தறி துணி நூல், சுற்றுலாத்துறை, பொதுத்தேர்தல், கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறையின் ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.
அலங்கார ஊர்தி அணிவகுப்புகளை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தனர்.