காலையில் குறைந்து மாலையில் உயர்ந்த தங்கம் விலை
- சில நாட்கள் அதே விலையில் நீடித்த தங்கம் விலை கடந்த 6-ந்தேதி மீண்டும் அதிரடியாக உயர்ந்து பவுன் ரூ.89 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.
- 8-ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1480 அதிகரித்து ரூ.91,080-க்கு விற்கப்பட்டது.
தங்கம் விலை சமீப காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் உச்சத்தை தொட்டு ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.85,120-க்கு விற்கப்பட்டது. மறுநாள் 29-ந்தேதி ரூ.86,160 ஆக அதிகரித்தது. 30-ந்தேதி ரூ.86,880 ஆக உயர்ந்தது.
கடந்த 1-ந்தேதி ரூ.87,600 ஆனது. சில நாட்கள் அதே விலையில் நீடித்த தங்கம் விலை கடந்த 6-ந்தேதி மீண்டும் அதிரடியாக உயர்ந்து பவுன் ரூ.89 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. 7-ந்தேதி மேலும் உயர்ந்து ரூ.89,600 ஆனது. 8-ந்தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1480 அதிகரித்து ரூ.91,080-க்கு விற்கப்பட்டது. நேற்று மேலும் அதிகரித்து ரூ.91,400-க்கு விற்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று காலை தங்கம் சவரனுக்கு ரூ.1,320 குறைந்த நிலையில், தற்போது தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 11,340 ரூபாய்க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,720-க்கு விற்பனையாகிறது.
அதே நேரத்தில் வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 184ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.3 ஆயிரம் அதிகரித்துள்ளது.