தமிழ்நாடு செய்திகள்

#GOLDPRICETODAY : வார தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?

Published On 2026-03-09 09:43 IST   |   Update On 2026-03-09 09:43:00 IST
  • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
  • ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை:

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த 1-ந்தேதி அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 2-ந்தேதியில் இருந்து தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.815-ம் சவரனுக்கு ரூ.6 ஆயிரத்து 520-ம் குறைந்து இருந்தது. தொடர்ந்து விலை சரிந்து கொண்டே வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை விலை அதிகரித்து சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400-க்கும் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.15,050-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

08-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400

07-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400

06-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,680

05-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,960

04-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,21,600

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

08-03-2026- ஒரு கிராம் ரூ.290

07-03-2026- ஒரு கிராம் ரூ.290

06-03-2026- ஒரு கிராம் ரூ.290

05-03-2026- ஒரு கிராம் ரூ.295

04-03-2026- ஒரு கிராம் ரூ.295

Tags:    

Similar News