தமிழ்நாடு செய்திகள்

#CBCID | விசாரணைக்கைதி உயிரிழந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்

Published On 2026-03-09 08:11 IST   |   Update On 2026-03-09 08:11:00 IST
  • ஆகாஷ் மருத்துவமனையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.
  • கொலை முயற்சி வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்டு இருந்தார்.

சிவங்கை மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் மருத்துவமனையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.

இவரை போலீசார் அடித்தேக் கொன்றதாகக்கூறி உடலை வாங்க மறுத்து பெற்றோர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கஸ்டடி மரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், இந்த மரண வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

மானாமதுரையில் இருவரை வெட்டிக்கொல்ல முயன்ற வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் காவல் துறை விசாரணையின் போது ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் பேசு பொருளாகி இருக்கிறது.

Tags:    

Similar News