தமிழ்நாடு செய்திகள்

சரக்கு ரெயில் தீ விபத்து - 10 டேங்கர்கள் எரிந்து சேதம்

Published On 2025-07-13 12:25 IST   |   Update On 2025-07-13 12:25:00 IST
  • தீ விபத்து காரணமாக 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் சேதமடைந்த நிலையில் மின்சார கேபிள்கள் உருகி நாசமடைந்தது.
  • சரக்கு ரெயில் பெட்டிகளை பிரித்து திருவள்ளூர் ரெயில் நிலையம் நோக்கி எடுத்து செல்கின்றனர்.

சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சரக்கு ரெயிலின் 52 பெட்டிகளில் 10 டேங்கர்கள் தீப்பற்றி எரிந்து சேதமானது. காலை 5 மணிக்கு தீப்பற்றிய நிலையில் தற்போது வரை தீப்பற்றி எரிந்து வருகிறது. சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீயில் 70 சதவீதம் தீ அணைக்கப்பட்டது.

தீ விபத்து காரணமாக 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் சேதமடைந்த நிலையில் மின்சார கேபிள்கள் உருகி நாசமடைந்தது.

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட சரக்கு ரெயிலின் டேங்கர்களை பிரித்தெடுக்கும் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது. தீ பரவுவதை தடுக்கும் வகையில் சரக்கு ரெயில் பெட்டிகளை பிரித்து திருவள்ளூர் ரெயில் நிலையம் நோக்கி எடுத்து செல்கின்றனர்.

சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ அருகே உள்ள நிலங்களில் பரவாமல் தடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News