தமிழ்நாடு செய்திகள்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான இலவச பயிற்சி

Published On 2025-11-08 10:29 IST   |   Update On 2025-11-08 10:29:00 IST
  • டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 10ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.
  • சென்னை ஆட்சியர் தரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், குரூப் 1, குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்புகிறது.

இதற்காக ஆண்டுதோறும் பல்வேறு நிலை தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணிகளில் அமர லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகின்றனர.

இந்நிலையில், சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 10ம் தேதி முதல் தொடங்கப்படுவதாக சென்னை ஆட்சியர் தரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ, 4 தேர்வு இலவச பயிற்சி வகுப்பு 10ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News