சரக்கு ரெயிலில் தீ விபத்து - எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்
- ரெயில்கள் இயக்கம், நிறுத்தம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 1 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளனர்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள், மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* திருவள்ளூர் அருகே சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் சென்னை சென்ட்ரலில் அவசர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
* ரெயில்கள் இயக்கம், நிறுத்தம் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* பயணிகள் சிரமத்தை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
* சரக்கு ரெயிலில் ஏற்பட்டுள்ள தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* 1 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளனர்.
* அருகிலுள்ள வீடுகளில் உள்ள மக்களையும் முகாம்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* அருகில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.