உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சி நடுங்க இது இபிஎஸ் ஆட்சி அல்ல.. அமித்ஷாக்கு ஆ.ராசா பதிலடி
- அமித்ஷாவின் மிரட்டல் உருட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்க இது தொடை நடுங்கி பழனிசாமி ஆட்சி அல்ல.
- அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குச் செயலாளர் ஆனார்?
நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். அவரது கருத்துக்கு திமுக எம்.பி. ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
துணை முதலமைச்சர் உதயநிதியை பார்த்து அமித்ஷாவுக்கு பயம் வந்துவிட்டது போல. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணிக்கு அவர் சமாதி கட்டுவார். எங்களுக்கான முதல்வர் அறிவாலயத்தில் இருந்து வருவார். அதிமுக, பாஜக கூட்டணிக்கு நாக்பூரில் இருந்து தான் வருவார்கள். வாக்குத் திருட்டு போல திருக்குறளை வைத்து தமிழர் ஓட்டுகளை திருட முடியாது.
அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குச் செயலாளர் ஆனார்? அவருடைய கிரிக்கெட் அறிவு என்ன? அவரை ஓட்டுப் போட்டா தேர்ந்தெடுத்தார்கள்? மக்கள் வாக்களித்தால் யாரும் முதலமைச்சர் ஆகலாம். தமிழ்நாட்டில் யார் முதலமைச்சராக வேண்டும் என்பதை அமித்ஷா முடிவு செய்ய முடியாது.
மோடியின் அமைச்சரவையில் 39 சதவிகிதம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் தான். வழக்கம் போலவே அரைத்த மாவையே அரைத்திருக்கிறார் அமித்ஷா. அமித்ஷாவின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி நடுங்க இது தொடை நடுங்கி பழனிசாமி ஆட்சி அல்ல.
என ஆ.ராசா கூறினார்.