தமிழ்நாடு செய்திகள்

குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட முடியாததால் தந்தை தற்கொலை

Published On 2025-11-27 15:01 IST   |   Update On 2025-11-27 15:01:00 IST
  • மனமுடைந்த சந்தனகுமார் கடந்த 24-ந் தேதி எலி பேஸ்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார்.
  • சம்பவம் குறித்து எருமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம், நவ.27-

சேலம் எருமாபாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் சந்தானகுமார் (38). இவருக்கு சரியான வேலை கிடைக்காத நிலையில் போதுமான வருமானமும் இன்றி தவித்து வந்தார். இதனால் பண பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணமும் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சந்தனகுமார் கடந்த 24-ந் தேதி எலி பேஸ்டை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு கடந்த 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்தானகுமார் பரிதாபமாக இறந்தார்.

இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். சம்பவம் குறித்து எருமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News