தமிழ்நாடு செய்திகள்

இளங்கலை வேளாண் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு - விசிக எம்.பி. ரவிக்குமார் எதிர்ப்பு

Published On 2025-10-04 15:37 IST   |   Update On 2025-10-04 15:37:00 IST
  • 12ம் வகுப்பில் வேளாண்மைப் பாடங்களைப் படித்த மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • CUET-ICAR நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக்கழகங்களிலும், 20% இளங்கலை இடங்கள் இனி CUET-ICAR நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

12ம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண்மைப் பாடங்களைப் படித்த மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேளாண் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வேளாண் படிப்புக்கு தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தும் ஒன்றிய அரசின் அறிவிப்பு மாநில உரிமைக்குள் தலையிடுவதாகும்.

இதுவரை ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாநில அரசின் கீழ் நடைபெறும் அட்மிஷனை நுழைவுத் தேர்வு என்ற பெயரில் தனது பிடிக்குள் கொண்டுவரப் பார்க்கும் மோடி அரசின் சதியைத் தமிழ்நாடு

முதலமைச்சர் முறியடிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News