சென்னை, திருச்சி, கோவையில் 10 இடங்களில் அதிரடி- அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
- கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தகவல்.
- சட்ட விரோத பணப்பரி மாற்றம் நடந்து இருப்பதாக சந்தேகம்.
சென்னை:
தமிழக அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. திருச்சி தில்லை நகரில் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. சென்னையில் அரசு பங்களாவில் அவர் குடும்பத்தினருடன் தங்கி உள்ளார்.
அமைச்சர் கே.என்.நேருவுக்கு அருண் நேரு என்ற மகன் உள்ளார். பெரம்பலூர் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருக்கும் அருண்நேரு ஆழ்வார்பேட்டையில் வசித்து வருகிறார்.
அமைச்சர் கே.என்.நேருவுக்கு ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகிய 2 சகோதரர்கள் உள்ளனர். ரவிச்சந்திரன் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 3-வது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார்.
இவர் டி.வி.எச். (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் டி.வி.எச். எனர்ஜி ரிசோர்சஸ் என்ற மின் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
கடந்த 2018-ம் ஆண்டு இந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அப்போது கணக்கில் வராத பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
அந்த சோதனையின் போது கே.என்.நேரு சகோதரர்களின் நிறுவன வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் சட்ட விரோத பணப்பரி மாற்றம் நடந்து இருப்பதாக அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து இது தொடர்பான தகவல்களை அமலாக்கத்துறை அதிகாரி களுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் ஆவ ணங்களுடன் கொடுத்து இருந்தனர்.
அந்த ஆவணங்களை ஆய்வு செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு தகவல்களை பெற முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் இன்று (திங்கட்கிழமை) காலை சென்னை, திருச்சி, கோவையில் உள்ள அமைச் சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அவரது சகோத ரர்கள் மகன் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அம லாக்கத்துறை அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை யில் ஈடுபட்டனர்.
சென்னையில் 7 இடங்க ளில் சோதனை நடத்தப் பட்டது. அடையாறு, தேனாம்பேட்டை, சி.ஐ.டி. காலனி, எம்.ஆர்.சி.நகர், ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் கே.என்.நேரு வின் சகோதரர் ரவிச்சந்திர னுக்கு சொந்தமான இடங்க ளில் சோதனை நடத்தப் பட்டது.
ரவிச்சந்திரன் டி.வி.எச். என்ற பெயரில் கட்டுமான நிறுவனங்கள் நடத்தி வருகி றார். ராஜா அண்ணாமலை புரத்தில் டி.வி.எச். எனர்ஜி ரிேசார்சஸ் என்ற மின் உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார். ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணாபுரி முதல் தெரு வில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
காற்றாலை மற்றும் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்வது தொடர் பா அலுவலகங்க ளாக அவை உள்ளன. கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்த மின் உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகளவில் இன்று சோதனை நடத்தி னார்கள்.
அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு எம்.பி.க்கு சொந்தமாக ஆழ்வார்பேட்டையில் ஜி.எஸ்.என்.ஆர். ரைஸ் இண்டஸ்டீரிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உள்ளது. அங்கும் அமலாக் கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அதுபோல அடையார் காந்தி நகர் 4-வது குறுக்கு தெருவில் உள்ள வைத்திய நாதன் அடுக்குமாடி குடியி ருப்பில் ஒரு வீட்டிலும் சோதனை நடந்தது. இந்த சோதனைகளில் என்னென்ன ஆவணங்கள் கிடைத்தன என்ற விவ ரங்கள் இன்று பிற்பகலில் தெரிய வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருக்கு சொந்தமான, திருச்சி தில்லை நகர் 5-வது குறுக்குத் தெருவில் உள்ள வீட்டில் கோவையில் இருந்து வந்துள்ள அமலாக் கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள னர்.
மேலும் அவரது சகோத ரர் மறைந்த கே.என்.ராம ஜெயத்துக்கு சொந்தமான திருச்சி தில்லை நகர் 10வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில், மதுரையில் இருந்து வந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த 2 இடங்களிலும் அமலாக்கத்துறையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணை ராணுவ படையினர் பாது காப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து அமைச்சர் கே. என். நேரு வீட்டு முன்பு கட்சியினர் திரண்டனர். இதனால் தில்லைநகர் 5-வது கிராஸ் மற்றும் 10-வது கிராஸ் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீடு கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ளது.
இந்த குடியிருப்புக்கு 3 கார்களில் இன்று காலை 7 மணிக்கு அமலாக்கத்துறை யினர் வந்தனர். அவர்கள் மணிவண்ணன் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை யில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நீடித்தது. சோத னையை முன்னிட்டு அந்த பகுதியில் போலீஸ் பாது காப்பு போடப்பட்டிருந்தது. அமலாக்கத்துறை யினர் சென்னையில் இருந்து வந்த தாக தெரிவித்து உள்ளனர்.
டி.வி.எச். கட்டுமான நிறுவனம் கோவை திருச்சி சாலை, அவிநாசி சாலை உள்பட பல்வேறு இடங்க ளில் அடுக்குமாடி குடியி ருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இதனை கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் கவனித்து வருகிறார். இந்தநிலையில் தான் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.