தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தர வேண்டும்- இ.பி.எஸ்.

Published On 2025-08-18 12:38 IST   |   Update On 2025-08-18 12:38:00 IST
  • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
  • தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News