தமிழ்நாடு செய்திகள்
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி
- எடப்பாடி பழனிசாமி நேற்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் இன்று திருப்பதிக்கு சென்றுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாள் முடிந்த கையொடு எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் இன்று திருப்பதிக்கு சென்றுள்ளார். அங்கு திருமலையில் உள்ள ஹயக்ரீவர் மற்றும் வராக சுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அவருடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.