தமிழ்நாடு செய்திகள்
திரௌபதி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது
- மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் சுமார் 22 மாதங்களுக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று திறக்கப்பட்டது. இதையடுத்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் பட்டியலின மக்கள் வழிபாடு செய்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து நடை சாத்தப்பட்டது.
தினந்தோறும் ஒரு மணிநேரம் நடை திறக்கப்படும் என்பதன் அடிப்படையில் நடை திறக்கப்பட்டு பின்னர் சாத்தப்பட்டது. கோவில் நடைசாத்தப்பட்ட நிலையில் கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.