தி.மு.க. முப்பெரும் விழா- கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது
- தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் வருகை.
- திமுக கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தைச் சார்ந்த கரூர் மாவட்டத்தில் நடைபெறும் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது. அதன்படி கரூர் திருச்சி சாலையில் கோடங்கிபட்டி அருகில் இன்று மாலை 5 மணிக்கு முப்பெரும் விழா தொடங்கியது.
தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் முப்பெரும் விழா மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
விழா மேடையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில், கனிமொழி எம்பிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் விருது வழங்கி கவுரவித்தார்.
இதேபோல், பாளையங்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் சீத்தாராமனுக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது. மேலும், கலைஞர் விருது- சோ. மா. ராமச்சந்திரன், முரசொலி அறக்கட்டளை சார்பில் 'முரசொலி செல்வம்' விருது- மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.
பாவேந்தர் விருது- அமரர் குளித்தலை சிவராமன், பேராசிரியர் விருது- மருதூர் ராமலிங்கம், மு.க.ஸ்டாலின் விருது- பொங்கலூர் நா. பழனிச்சாமி.