தமிழ்நாடு செய்திகள்
வாய்க்கு வந்ததை பேசுகிறார்: ஆதவ் அர்ஜுனா கூறியது நீதிமன்ற அவமதிப்பாகும் - தி.மு.க. எம்.பி. வில்சன்
- சி.பி.ஐ. விசாரணையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை.
- நீதிமன்றத்தை இவ்வாறு குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில் தி.மு.க. எம்.பி. வில்சன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அருணா ஜெகதீசன் ஆணையம் மீது சுப்ரீம் கோர்ட் விமர்சனத்தை முன்வைக்கவில்லை.
* இரு மனுக்கள் மனுதாரர்களுக்கு தெரியாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
* இரு மனுக்களும் போலி என தெரிய வந்தால் தற்போதைய உத்தரவு ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
* சி.பி.ஐ. விசாரணையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை.
* கரூர் நெரிசல் வழக்கில் ஐகோர்ட்டுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து உத்தரவை பெற்றது என ஆதவ் அர்ஜுனா கூறியது நீதிமன்ற அவமதிப்பாகும்.
* நீதிமன்றத்தை இவ்வாறு குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
* வாய்க்கு வந்ததை பேசுகிறார் ஆதவ் அர்ஜுனா.
இவ்வாறு அவர் கூறினார்.