தமிழ்நாடு செய்திகள்
மின் கசிவால் விபரீதம்: பற்றி எரிந்த அடுக்குமாடி குடியிருப்பு
- 5ஆவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து, 6ஆவது மாடிக்கும் பரவியது.
- மிக்சியில ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 5ஆவது மாடியில் ஏற்பட்ட தீ, மளமளவென 6ஆவது மாடிக்கும் பரவியது. இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மிக்சியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.