தமிழ்நாடு செய்திகள்

சதுரகிரி கோவிலுக்கு இன்றும், நாளையும் பக்தர்கள் செல்ல தடை- வனத்துறை அறிவிப்பு

Published On 2025-05-25 11:05 IST   |   Update On 2025-05-25 11:05:00 IST
  • இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என உத்தரவிட்டதை அடுத்து கடந்த ஏப்ரல் 3-ந்தேதி முதல் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
  • அருவிகள் மற்றும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதியில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு நாள்தோறும் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சென்று வருகின்றனர். மாலை 4 மணிக்குள் திரும்பி வரவேண்டும். இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என உத்தரவிட்டதை அடுத்து கடந்த ஏப்ரல் 3-ந்தேதி முதல் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள மழை முன்னெச்சரிக்கை செய்தி குறிப்பில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று (25-ந்தேதி) மற்றும் நாளை (26-ந்தேதி) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு 2 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், செண்பகத்தோப்பு மற்றும் ராக்காச்சி அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள அருவிகள் மற்றும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதியில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News