தமிழ்நாடு செய்திகள்

அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி மரியாதை

Published On 2025-11-27 09:47 IST   |   Update On 2025-11-27 09:47:00 IST
  • அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
  • தாய், தந்தையை கூட இன்னும் சந்திக்காமல் நேராக பெரியார் திடலுக்கு வந்தேன்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது 49-வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உதயநிதி உரையாற்றினார். அவர் பேசுகையில்,

தாய், தந்தையை கூட இன்னும் சந்திக்காமல் நேராக பெரியார் திடலுக்கு வந்தேன்.

மூத்தவர்களாகிய உங்களை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்துள்ளேன். கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன் என்று பேசினார்.

Tags:    

Similar News