தமிழ்நாடு செய்திகள்
சென்னையில் இருந்து சுமார் 1050 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம்
- நாகையில் இருந்து சுமார் 880 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் சென்னையில் இருந்து சுமார் 1050 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. நாகையில் இருந்து சுமார் 880 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இலங்கையில் இருந்து 600 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.