தமிழ்நாடு செய்திகள்

வேகம் குறைந்த மோன்தா புயல்

Published On 2025-10-28 12:09 IST   |   Update On 2025-10-28 12:09:00 IST
  • ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு தெற்கு, தென்கிழக்கே 320 கிலோ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
  • மோன்தா புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மோன்தா தீவிரப்புயல் ஆந்திராவின் மச்சிலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 160 கிலோ மீட்டரும், காக்கிநாடாவுக்கு தென்கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கு தெற்கு, தென்கிழக்கே 320 கிலோ தொலைவில் மையம் கொண்டுள்ள புயலானது மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்த மோன்தா தீவிரப்புயல் தற்போது சற்றே குறைந்து 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது.

இதனிடையே மோன்தா புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News