தாமதமாகும் புயல் - மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.. லைவ் அப்டேட்ஸ்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கடல் நீர் மற்றும் கடற்கரையின் நிறம் மாறி காட்சி அளிக்கிறது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை. கும்பகோணம் சுற்று வட்டாரத்தில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கின.
நாகை மாவட்டம் என்ஜிஓ காலனி பகுதியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகைக்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவில் புயல் சின்னம் உள்ளது. சென்னையில் இருந்து 530 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த தாழ்வு மண்டலம் உள்ளது. புயல் சின்னம் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.
பாம்பன் பகுதியில் காலை முதலே கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக தோப்புக்காடு பகுதியில் கடல்நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.