தொடர் கனமழை - எந்தெந்த மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை தெரியுமா?
- கனமழை காரணமாக 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- துவை, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரியலூர், ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், கரூர், மதுரை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கனமழை காரணமாக புதுவை, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.