தமிழ்நாடு செய்திகள்

திருச்செந்தூர் அருகே கட்டிடதொழிலாளி வெட்டிக்கொலை- உறவினர் வெறிச்செயல்

Published On 2025-05-22 11:23 IST   |   Update On 2025-05-22 11:23:00 IST
  • வாக்குவாதத்தில் கோபமடைந்த ஜவகர், ஜெகதீசை வெட்டியுள்ளார்.
  • கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் ஜவகரை கைது செய்தனர்.

திருச்செந்தூர்:

தூத்துக்குடி பக்கில் புரத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார்(வயது 32). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி திருச்செந்தூர், அடைக்கலாபுரம் பிலோமிநகரை சேர்ந்த அந்தோணி பிச்சை என்பவருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்து அவருடன் வாழ்ந்து வருகிறார்.

தன்னை பிரிந்து வேறொருவருடன் வாழும் மனைவி இருக்கும் இடத்தை கண்டறிய கணவர் கணேஷ்குமார் மற்றும் அவரது நண்பரான அதே பிலோமிநகரை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஜெகதீஷ்(32) ஆகிய இருவரும் ஜெகதீஷின் சித்தி மகனான ஜவகர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபமடைந்த ஜவகர், ஜெகதீசை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜெகதீஷ் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் தூத்துக்குடிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் ஜவகரை கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட ஜவகரின் தாயாரும், உயிரிழந்த ஜெகதீஷ் தாயாரும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவார்கள்.

Tags:    

Similar News