மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நாளை தொடக்கம்: முதல்-மந்திரிகள், திரை பிரபலங்கள் பங்கேற்பு
- ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
- 2-ந்தேதி தொடங்கி, 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு, மதுரையில், நாளை 2-ந்தேதி தொடங்கி, 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் காஷ் மீர் முதல் கன்னியாகுமரி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கேரளா முதல்வர் பினராயி விஜ யன், பிருந்தா காரத், திரி புரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நாளை காலை 10.30 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்-திரிபுரா முன்னாள் முதல்-மந்திரி மாணிக் சர்க்கார் தலைமையில் நடைபெறும் பொது மாநாட்டை அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தொடங்கி வைக்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து. ராஜா. சி.பி.ஐ. (எம்.எல்) விடுதலை பொதுச் செயலாளர் தீபங் கர் பட்டாச்சார்யா, புரட்சி கர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன் உள்ளிட் டோர் பங்கேற்று வாழ்த்திப் பேச உள்ளனர்.
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவரு மான கே. பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்ற, வெங்கடேசன் எம்.பி. மற்றும் மாநிலத்தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மாநாடு நடைபெறும் 5 நாட்களும் மாலை நேரங்களில் ஜானகியம்மாள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மேடையில் கலைநிகழ்ச்சிகள்-கருத்தரங்குகள் நடை பெறுகின்றன.
இதில், 3 மாநிலங்களின் முதல்-மந்திரிகள் அமைச்சர்கள், அறிஞர்கள் எழுத்தாளர்கள், கலை ஞர்கள், திரைப்பட இயக்கு நர்கள் உள்ளிட்ட ஆளுமை கள் பங்கேற்கின்றனர்.
இதன்படி நாளை மாலை 5 மணிக்கு பாப்பம்பாடி ஜமா பெரிய மேளம், திண்டுக்கல் சக்தி போர்ப் பறை குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும், தமிழறிஞர் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குநர்கள் ராஜூ முருகன், சசிகுமார் ஆகியோரின் உரை வீச்சும் அரங்கேறுகின்றன.
3 ந்தேதி மாலை 5 மணிக்கு, கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை'என்றதலைப்பில் மாநில உரிமைகள் பாது காப்புக் கருத்தரங்கம்' நடைபெறுகிறது. இதில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில உயர்கல்வித்துறை மந்திரி சுதாகர். சி.பி.எம். அகில இந்திய ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர்.
4-ந்தேதி மாலை 5 மணிக்கு கேரள மாப்ளா முஸ்லிம் பெண்கள் குழுவின் ஆடல், பாடல், சென்னைக் கலைக்குழுவின் நாடகம், கானா விமலாவின் பாடல்கள் ஆகியவை இடம் பெறுகின்றன. திரைக் கலைஞர் விஜய்சேதுபதி, இயக்குநர்கள் சமுத்திரக் கனி, வெற்றிமாறன் ஆகி யோர் உரையாற்றுகின்றனர்.
6-ந்தேதி மாலை நடக்கும் நிகழ்ச்சிகளில் பிரகாஷ் ராஜ், திரைப்பட இயக்கு நர்கள் மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல் ஆகியோர் பேசுகிறார்கள்.
வரலாற்றுக் கண்காட்சி யை மூத்த ஊடகவியலாளர் என்.ராம் திறந்து வைக்கி றார். புத்தகக் கண்காட்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே. பரமேஸ்வரன் திறந்து வைக்கிறார்.
6-ந்தேதி பிற்பகல் 3 மணியளவில், 25 ஆயிரம் செந்தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் என். சங்கரய்யா நினைவுத்திடலில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் பிரம் மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தலைமையில் நடைபெறும் இந்த பொதுக் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய ஒருங்கி ணைப்பாளர் பிரகாஷ் காரத், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி. சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.