தமிழ்நாடு செய்திகள்
கோவையில் கோர விபத்து- பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்ற 4 பேர் பலி
- விபத்தில் படுகாயமடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- கார் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை செட்டிப்பாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்றபோது விபத்து நேரிட்டதாகவும், விபத்தில் நண்பர்களான பிரகாஷ், ஹரிஷ், சபரி, அகத்தியன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மதுபோதையில் அதிவேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
4 பேர் உயிரிழந்த கார் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.