ஆற்றங்கரையில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து
- கட்டடம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நீர் ஓடையை தூர்வாரும் பணி மேற்கொள்ள இருப்பதால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
கோவை:
கோவை சிவானந்தா காலனி அருகே ஹட்கோ காலனியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு பின்புறம் சங்கனூர் ஒடை அருகே 70-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அமைந்துள்ளது.
இந்த நிலையில் மாநகர பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் சங்கனூர் ஓடையை தூர்வாரி கரைப்பகுதியை பலப்படுத்தி வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போலீஸ் சோதனை புறக்காவல் நிலையம் அருகே தொடங்கி 2.3 கி.மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக சங்கனூர் ஓடையின் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஓடையின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
டாடாபாத் ஹட்கோ காலனி அண்ணாநகரில் சங்கனூர் ஓடைதூர்வாரும் பணி நடந்தது. சங்கனூர் ஓடையின் கரையோரம் சுரேஷ என்பவருக்கு சொந்தமான 2 மாடி வீடு உள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டின் பின்பகு தியை 10 அடி தூரம் வரை இடித்து அகற்றி தர வேண்டும் என மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இதையடுத்து அந்த வீட்டின் பின்புறம் 10 அடி வரை இடித்து அகற்றப்ப ட்டது. பின்புற வீட்டை அகற்றியதால் சுரேஷ் வேறு வீட்டிற்கு சென்று விட்டார். இருப்பினும் பொருட்கள் அந்த வீட்டிலேயே இருந்தது. அவ்வப்போது அந்த வீட்டி ற்கு வந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நேற்றிரவு 2 மாடி வீட்டில் திடீரென அதிர்வு ஏற்பட்டது. மேலும் வீடு சரிந்து கீழே விழுவது போல அசைந்து கொண்டு இருந்தது.
இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடை ந்தனர். இந்த வீட்டில் ஏற்ப ட்ட அதிர்வு அருகே உள்ள லட்சுமணன், ரேணுகா தம்பதியரின் வீட்டிலும் காணப்பட்டது.
அவர்கள் அப்போது வீட்டிற்குள் அமர்ந்து சாப்பி ட்டு கொண்டிருந்தனர். வீடு அதிர்வது போன்று உணர்ந்ததால் உடனடியாக வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.
இந்த நிலையில் சிறிது நேரத்தில் சுரேஷின் 2 மாடி வீடு முழுவதுமாக சீட்டுக்க ட்டு போல சரிந்து கீழே விழுந்தது. அருகே இருந்த 2 வீடுகளும் இடிந்து விழு ந்தன. அதிர்ஷ்டவசமாக 2 மாடி வீட்டிற்குள் யாரும் இல்லாததாலும், அருகே இருந்த வீட்டில் இருந்த வர்கள் உடனடியாக வெளி யேறியதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்ப ட்டது. வீட்டிற்குள் இருந்த டி.வி, பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதம் அடைந்தது.
மேலும் வீடு இடிவதற்கு கால் மணி நேரத்திற்கு முன்பு வரை, வீடு இடிந்து விழுந்த இடத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணியில் இருந்த னர். பணி முடிந்து அவர்கள் சென்றதால் பெரும் உயிர்சே தம் தவிர்க்கப்பட்டது.
அடுத்தடுத்து வீடுகள் இடிந்து விழுந்த சம்பவம் கோவையில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை இழந்து தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தகவல் அறிந்தது மாநக ராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இடிந்து விழுந்த வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை இங்கு பணிகளை மேற்கொள்ள கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்டு நிர்வாகிகள் கிருஷ்ண மூர்த்தி, நாராயணசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.