தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பெங்களூரு செல்கிறார்

Published On 2025-10-09 14:33 IST   |   Update On 2025-10-09 14:33:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்புகிறார்.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் தனி விமானத்தில் பெங்களூரு செல்கிறார்.

சென்னை:

கோவையில் நடைபெற்ற உலகப் புத்தொழில் மாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்புகிறார். முதலமைச்சரின் மைத்துனர் செல்வம், கடந்த ஆண்டு இறந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி பெங்களூருவில் உள்ள செல்வம் வீட்டில் நடக்கும் நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் தனி விமானத்தில் பெங்களூரு செல்கிறார்.

Tags:    

Similar News