பொள்ளாச்சி வழக்கு போல கொடநாடு வழக்கிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் - மு.க.ஸ்டாலின்
- யாருடைய பிள்ளையாக இருந்தாலும் எத்தனை செல்வாக்கு மிகுந்தவராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என கூறி இருந்தேன்.
- எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களை மட்டுமே கூறி வருகிறார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஊட்டிக்கு சென்றுள்ள முதலமைச்சர் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட பெரும்பகுதி அரங்கில் மனைவி துர்காவுடன் நடைபயிற்சி மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு குறித்து உதகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என கூறி இருந்தேன்.
* உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என 2019 தேர்தலின்போது வாக்குறுதியாகவே சொன்னேன்.
* யாருடைய பிள்ளையாக இருந்தாலும் எத்தனை செல்வாக்கு மிகுந்தவராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என கூறி இருந்தேன்.
* சொன்னது போல் பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளோம்.
* செல்லூர் ராஜூ ஒரு கோமாளி. அவர் சொல்வதை பெரிதுபடுத்த விரும்பவில்லை.
* ஆபரேஷன் சிந்தூர் சிறப்பாக இருந்தது. அதற்கு தான் ஆதரவு தெரிவித்தோம்.
* எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களை மட்டுமே கூறி வருகிறார்.
* கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.
* எடப்பாடி பழனிசாமி எதற்காக அமித்ஷாவை சென்று பார்த்தார் என்பது நாட்டிற்கே தெரியும்.
* கொடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படும்போது அதற்கும் தானே காரணம் என இ.பி.எஸ் கூறுவாரா? என பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.