தமிழ்நாடு செய்திகள்
புதிய மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 400 படகுகள், 250 ஃபைபர் படகுகளை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- மீன்பிடி தொழில் வளர்ச்சிக்கு இந்த துறைமுகம் உதவியாக இருக்கும்.
சென்னை திருவொற்றியூரில் மீனவர் நலத்துறை சார்பில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ரூ.426 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், மீன் விதைப் பண்ணை உள்ளிட்ட 13 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* 400 படகுகள், 250 ஃபைபர் படகுகளை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* பாரம்பரிய உரிமைகளை மீட்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
* மீன்பிடி தொழில் வளர்ச்சிக்கு இந்த துறைமுகம் உதவியாக இருக்கும்.
* மீனவர்களின் கண்ணீரை துடைக்கும் அரசாக தி.மு.க. அரசு இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.