தமிழ்நாடு செய்திகள்

அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Published On 2025-11-01 13:14 IST   |   Update On 2025-11-01 13:14:00 IST
  • ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
  • நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாகவும், என்ன மாதிரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றலாம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகின்றன.

சென்னை:

தமிழ்நாட்டில் அரசியல் கட்சி கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாகவும், என்ன மாதிரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றலாம், கூட்ட நெரிசலைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகின்றன. 

Tags:    

Similar News