தமிழ்நாடு செய்திகள்

திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-08-11 11:00 IST   |   Update On 2025-08-11 11:00:00 IST
  • தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
  • காங்கேயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அரசு விழாவில் பங்கேற்ற பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

* அண்ணா, கலைஞர் படங்களில் பாடல் இயற்றிய நாராயண கவியின் சொந்த ஊர் உடுமலை. இயற்கை எழில் சூழ்ந்து, சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு இனிப்பான சர்க்கரை அள்ளித்தரும் ஊர் உடுமலை.

* இயற்கை, கலை, இலக்கியம் என அனைத்து துறைகளின் கோட்டை தான் உடுமலைப்பேட்டை.

* ஆறுகள், மலைகள் என இயற்கை எழில் சூழ்ந்த உடுமலைக்கு வந்ததில் மகிழ்ச்சி.

* பெரியாரும், அண்ணாவும் சந்தித்த திருப்பூர் மாவட்டங்களில் இன்று விழா நடைபெறுகிறது.

* தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

* காங்கேயம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

* தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

* ரூ.172 கோடியில் நொய்யல் ஆறு மேம்பாடு செய்யப்பட உள்ளது. கீழக்கோவிலில் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது.

* திருப்பூர் நியோ டைடல் பூங்கா, 7 ஊராட்சிகளுக்கு கூட்டுக்குடிநீர் செயல்படுத்தப்பட உள்ளது.

* நீராறு, நல்லாறு, ஆனைமலையாறு திட்டப்பணிகளை விரைவில் செயல்படுத்த உள்ளோம்.

* பரம்பிக்குளம் ஆழியாறு பாசனப்பகுதியை தூர்வாற ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.

* நவீன வசதிகளுடன் ரூ.9 கோடியில் மாவட்ட மைய நூலகம் அமைக்கப்படும். ரூ.5 கோடியில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம், உப்பாற்றின் குறுக்கே ரூ.7 கோடியில் புதிய தடுப்பனை கட்டப்படும்.

* ரூ.6.5 கோடியில் புதிய வெண்ணெய் தொழிற்சாலை அமைக்கப்படும்.

* அரசு பள்ளிக்கு நிலம் அளித்த சாதிக் பாட்ஷா பெயரில் சாலை அமைக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News