தமிழ்நாடு செய்திகள்
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையின் பெயர் 'ஜெய்சங்கர் சாலை' என மாற்றம்: அரசாணை வெளியீடு
- கல்லூரி பாதை பெயர் ஜெய்சங்கர் சாலை என மாற்ற அரசாணை வெளியீடு.
- கல்லூரி பாதையில் இருந்து வீட்டில் பல ஆண்டுகள் ஜெய்சங்கர் வசித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதையின் பெயரை (College lane) ஜெய்சங்கர் சாலை என்று மாற்றம் செய்ய அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. கல்லூரி பாதையில் இருந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்து வந்த நடிகர் ஜெய்சங்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.