தமிழ்நாடு செய்திகள்

டயர் வெடித்த நிலையில் சென்னை வந்த விமானம்.. சாமர்த்தியமாக தரையிறக்கிய விமானி

Published On 2025-03-30 11:15 IST   |   Update On 2025-03-30 11:15:00 IST
  • விமான நிலைய பணியாளர்கள் காத்திருந்தனர்.
  • விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து சென்னைக்கு இன்று காலை வந்த விமானத்தின் டயர் திடீரென வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர்.

சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன், அதன் டயரில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் விமான நிலைய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்தார். ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்தனர்.

டயரில் கோளாறு ஏற்பட்ட நிலையில், சாதுரியமாக செயல்பட்ட விமானி அசம்பாவிதம் ஏற்படாத வகையில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். தரையிறங்கிய பின் விமானத்தின் டயர்களை பரிசோதனை செய்ததில், 2-வது சக்கரத்திலுள்ள டயர் வெளியே வெடித்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

Tags:    

Similar News