தமிழ்நாடு செய்திகள்

செங்கல்பட்டு- கடற்கரை புறநகர் ரெயில் சேவை நாளை ரத்து

Published On 2025-07-10 13:39 IST   |   Update On 2025-07-10 13:39:00 IST
  • செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரெயிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
  • சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை:

எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் நடைபெற்று வரும் பணி காரணமாக செங்கல்பட்டு- கடற்கரை புறநகர் ரெயில் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு- கடற்கரை இடையே இயக்கப்படும் ரெயிலும், செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரெயிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு- கடற்கரை இடையே புறநகர் ரெயில் ரத்து செய்யப்பட்டதற்கு பதிலாக சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News