தமிழ்நாடு செய்திகள்
null

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தை நிராகரித்தது மத்திய அரசு

Published On 2025-11-18 16:09 IST   |   Update On 2025-11-18 16:18:00 IST
  • தமிழக அரசின் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.
  • மாநகர் பகுதியில் 20 லட்சத்திற்கும் குறைவாகவே மக்கள் தொகை இருப்பதாக தகவல்.

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான திட்ட அறிக்கை தயாரித்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இந்த அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் தொகையை காரணம் காட்டி திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதாக தெரிகிறது. 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களுக்கு மெட்ரோ திட்டம் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இரண்டு மாநகர் பகுதிகளிலும் 20 லட்சத்திற்கும் குறைவாகவே மக்கள் தொகை இருப்பதாக விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News