தமிழ்நாடு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்

Published On 2024-12-27 16:46 IST   |   Update On 2024-12-27 18:27:00 IST
  • கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ளார்.
  • ஞானசேகரன் போனில் சார் சார் என பேசியுள்ளார். அந்த சார் யார் என்பதை தற்போது வரை காவல்துறை வெளிக்கொண்டு வரவில்லை.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மட்டும்தான் குற்றவாளி என போலீஸ் தரப்பிலும், அரசு தரப்பிலும் கூறப்படுகிறது.

இதற்கிடையே ஞானசேகருக்கு தி.மு.க. பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டு ஆதாரமாக படங்களையும் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருடமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* அண்ணா பல்கலைக்கழக பாலியல் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

* பல்கலைக்கழகத்தில் உள்ள 70 சிசிடிவியில் 56 தான் வேலை செய்கிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.

* தமிழகம் முழுவதும் இருந்து படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

* ஞானசேகரன் போனில் சார் சார் என பேசியுள்ளார். அந்த சார் யார் என்பதை தற்போது வரை காவல்துறை வெளிக்கொண்டு வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது.

* FIR வெளிவந்த விவகாரத்தில் உண்மையை மறைக்கின்றனர்.

* தமிழகத்தில் குற்றவாளிகள் அச்சமின்றி செயல்படுகிறார்கள். காவல்துறைக்கு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை.

* அமைச்சர் மற்றும் காவல் ஆணையரின் கருத்துகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

* கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக அமைச்சர்களுடன் தொடர்பில் உள்ளார்.

* அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை.

* ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் காப்பாற்ற முயற்சியா?

* அரசின் இது போன்ற செயல்களால்தான் தவறு செய்பவர்களுக்கு தைரியம் வருகிறது.

* பாலியல் குற்றவாளிகளை தண்டிப்பதுதான் அரசின் கடமை. ஆனால் அரசு சிபிஐ விசாரிக்க கூடாது என மேல்முறையீடு செய்கிறது.

Tags:    

Similar News