தூய்மைப் பணியாளர்களை சந்திக்கச் சென்ற தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு
- தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எண் 285-ன் படி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்
- பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள இரண்டு மண்டல (5 மற்றும் 6) தூய்மை பணிகளை தனியாருக்கு விட்டதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையில் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எண் 285-ன் படி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்
இதற்கிடையே போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
நேற்று சேகர்பாபு உள்ளிட்ட அமைசர்கள் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து இரவில் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக தூமைப்பனியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
முன்னதாக நேற்று மாலை தடையை மீறி போராட்டம் நடைபெறும் ரிப்பன் மாளிகை கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்களை சந்தித்தார்.
இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் மீது பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி தூய்மை பணியாளர்களை சந்தித்ததாக தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்களை சந்திக்க விடாமல் அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.